வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையம்
VANNI TAMIL COMMUNITY AND CULTURAL CENTRE

உதவி செய்வதற்க்கு பணம் மட்டும் போதாது... நல் இதயங்களும் அவசியம்....

இணையுங்கள் ஒன்றாக கரம் கோர்த்து கரம் நீட்டும் உறவுகளின் கரங்களை இறுகப் பற்றுவோம்..!

| |

நெடுங்கேணி ஒலுமடுவைச் சுற்றியுள்ள ஓடைவெளி,முதிரம்பிட்டி,கீரிசுட்டான், கற்குளம்,பட்டிக்குடியிருப்பு,மருதோடை, காஞ்சூரமோட்டை ,கோவில்புளியங்குளம், ஊஞ்சால்கட்டி,இராசபுரம் கோரமோட்டை, நொச்சிக்குளம், பட்டடைபிரிந்தகுளம்,போன்ற கிராமங்களில் அதிகமான குடும்பங்கள் போரினால் பாதிக்கப்பட்ட இறப்புக்களையும், உறுப்புக்களையும் பறிகொடுத்த குடும்பங்களாகவும், இன்றும் மிக அடிப்படையான வாழ்வாதார வசதிகளைக் கொண்ட குடும்பங்களாகவுமே வாழ்க்கையினை நடாத்திச் செல்கின்றன. 

| |

20 பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உதவி நிதியுதவி வழங்கும் வைபவம் கௌரவ வன்னிப் பாரளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்காந்தராசா அவர்களின் தலைமையில் புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் கடந்த யூன் மாதம் 18ம் திகதி இடம்பெற்றது.

| |

எமது அமையத்தினால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் கணிணி நிலையங்களில் ஒன்றான தேசிய தொழிநுட்ப நிறுவனத்தின் தண்ணீரூற்றுக் கிளைக்கு கனடா பிறம்ரம் தமிழ்ச் சங்கத்தினால் ஒரு தொகுதி கணிணிகள் நன்கொடையளிக்கப்பட்டுள்ளது.

 

| |

கனடா வன்னிச் சங்கம் உதவி வழங்கும் செயற்பாடுகளில் மற்றும் ஒன்றாக ஆரம்பிக்கப்பட்ட குழந்தைகள் வாழ்கின்ற இல்லங்களுக்கு உதவி வழங்கும் செயற்பாடுகளில் 3வது உணவு வழங்கும் உதவிச் செயற்பாடு செல்வி சி. பிரித்திகாவின் 2வது பிறந்த நாளில் இடம்பெற்றுள்ளது.