|
வன்னித்தமிழ்ச் சமூகமும் வன்னித்தமிழ் மக்களும் இணைந்து நடாத்தும் வன்னிக்கான இடர்கால ஒன்று கூடல் எதிர்வரும் ஆகஸ்ட் 2ம் திகதி மதியம் 12 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இடர்கால ஒன்று கூடல்
வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையம் - கனடா.
அவலத்தில் ஆழ்ந்துகிடக்கும் எமது மக்களுக்கு உதவும் பொருட்டு மேற்படி ஒன்றுகூடலானது நடாத்தப்படவுள்ளது. இவ் ஒன்றுகூடலில்
• எமது மக்களின் துயர்போக்க உங்களாலான உதவியை எதிர்பார்க்கின்றோம்.
• போர்க்காலகட்டத்தில் உயிர்நீர்த்த, அங்கவீனமுற்ற, காயமடைந்த, மற்றும் உளநோய்க்குள்ளாகிய உங்கள் உறவுகள் தொடர்பான தகவல்களை ஒன்றுகூடலில் பதிவுக்குழுவினரிடம் பதிவுசெய்யும்படி தயவாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
• எமது உறவுகளுக்கு ஏற்பட்ட இந்தத்துயரை எண்ணித் தனித் தனியே துயருறும் நாம் இந்த ஒன்று கூடலில் இணைந்து அதனைப் பகிர்ந்து கொள்ளவும் வஞ்சிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வுக்குக் கைகொடுத்து உதவ உறுதி பூணும் பொருட்டும் உங்களை அன்போடு அழைக்கின்றோம்.
ஒன்றுகூடல் நடைபெறும் இடம்:- மிடில்பீல்ட் வீதியும் இஸ்ரீல் வீதியும் சந்திக்கும் சந்திப்பிற்கு அருகாமையில் உள்ள மிலிக்கன் பூங்கா திடல் “பி” (Milikan Park – Area B).
காலம்: ஆவணி மாதம் 2ம் திகதி 2009ம் ஆண்டு ஞாயிற்றுக் கிழமை காலை 11.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை.
குறிப்பு:- நுழைவுக் கட்டணம் அறவிடப்படமாட்டாது. சிறுவர்களுக்கான உணவுவகைகளும் மதிய உணவும் வழங்கப்படும்.
மேலதிக தகவல்களுக்கு: - தலைவர்:-416-264-0679இ பிரதிச் செயலாளர்:- 416-871-7286 |