|
தாய் மண்ணில் போரினால் இடம்பெயர்ந்து அல்லலுறுகின்ற மக்களது துயர் போக்குவதற்கான அவசர உதவி வேண்டி முன்னெடுக்கப்படுகின்ற “அரவணைப்போம்” நிகழ்வானது கார்த்திகை மாதம் 1ம் திகதி ஸ்ரீ ஐயப்பன் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கனடாவில் வாழ்கின்ற மண்ணின் உறவுகளாகிய நாங்கள் தாய்மண்ணில் அல்லலுறுகின்ற எங்கள் தமிழ் உறவுகளை அரவணைத்து உதவி செய்ய கனடாவில் இயங்குகின்ற எங்கள் ஊர் அமைப்புக்களையும், பாடசாலை மன்றங்களையும் ஒன்றிணையுமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம். இணைந்து கொள்ள விரும்புகின்ற அமைப்புக்கள் காலந்தாழ்த்தாது கீழ் உள்ள இலக்கங்களை அழைப்பதுடன் எதிர்வரும் 19 ஐப்பசி(oct) 2008 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு 2929 லோரன்ஸ் அவனியு கிழக்கு அறை இலக்கம் 203ல் நடைபெறவிருக்கும் ஒருங்கிணைப்புக் கூட்டத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம்.
மேற்படி நிகழ்வின் மூலமாகத் திரட்டப்படுகின்ற நிதியானது கெயர் (Care) அமைப்பினூடாக தாயகத்தில் அல்லலுறும் மக்களது துயர் துடைக்க அனுப்பிவைக்கப்படும் என்பதனை அறியத்தருகின்றோம்.
ஓன்றிணைந்து கொள்ள அழைக்க வேண்டிய தொலைபேசி இலங்கங்கள்:
1. சிவா (நெடுந்தீவு மக்கள் ஒன்றியம்) 416-277-9471.
2. சத்தியா (துன்னாலை கரவை மக்கள் மண்றம்) 416-505-3194.
3. சிவா (வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையம்) 416-520-1214.
4. லோகன் (வேலணை மத்திய மகாவித்தியாலய ப. மா) 416-450-3984.
பதிவு செய்யப்பட்ட தகவலைப் பெறவும், தகவல் பதிவுக்குமாக அழைக்கவேண்டிய தொலைபேசி இலக்கம்: 416-623-9558
குறிப்பு: ஊடகங்களுக்கு மட்டும்: 416-520-1214 இத்தகவலை மிக விரைவாக விளம்பரப்படுத்துமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம்! |