|
அவசர உதவி கோரும் அறிவித்தல் |
PDF
|
| Print |
|
E-mail
|
|
வன்னிப்பிரதேச மக்கள் குடியிருப்புக்கள்மீது கண்மூடித்தனமாக இராணுவத்தினர் நடாத்துகின்ற விமானத் தாக்குதல்களினாலும், செல்தாக்குதல்களினாலும் பரவலாக மக்கள் இடம் பெயர்ந்து கொண்டிருக்கின்றார்கள். பெருந்தொகையான மக்களது இடப்பெயர்வானது பல்வேறுவகையிலான மனித அவலங்களை ஏற்படுத்தியுள்ளது. தங்குமிட வசதியின்மை, போதிய உணவு வசதியின்மை, குழந்தைகளுக்கான போசாக் உணவின்மை, குடிநீர் வசதியின்மை, சுகாதார வசதிக்குறைவுகள் என்பன எம் உறவுகள் மீது மனிதப் பேரவலங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
மேற்படி பேரழிவுகளில் இருந்து எம் உறவுகளைக் காப்பாற்ற வேண்டிய பாரிய பொறுப்பு புலம் பெயர்ந்த மக்களாகிய எங்களது உதவிகளிலும் தங்கியுள்ளது. எனவே அவர்களுக்கு நேரடியாக உதவும் பொருட்டு வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையமானது தனது முதற்கட்ட நடவடிக்கையாக ரூபா 600000.00 தை அனுப்பிவைத்துள்ளது. அத்தோடு நின்றுவிடாமல் தொடர்;ச்சியாக அவர்களுக்கு நிதி வழங்கி உதவிசெய்யும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.
எனவே வன்னியில் வீடின்றி, உணவின்றி தெருவோரங்களிலும் மரங்களி;ன் கீழும் வாழ்கின்ற மக்களுக்கு உதவ விரும்பும் பெருந்தகையாளர்கள் பின்வரும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
(த. பாலசுப்பிரமணியம்)
தலைவர்
வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையம்.
தொடர்புகளுக்கு: நித்தி: 416-264-0679
சிவா: 416-520-1214
கோபு: 416-897-6993 |