Home

Written by Super User

20 பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உதவி நிதியுதவி வழங்கும் வைபவம் கௌரவ வன்னிப் பாரளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்காந்தராசா அவர்களின் தலைமையில் புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் கடந்த யூன் மாதம் 18ம் திகதி இடம்பெற்றது.

 

இந் நிகழ்வில் முல்லைத்தீவு கல்வி வலயப் பணிப்பாளர் திருமதி மு. உதயராணி அவர்களும் உதவிபெறும் மாணவர்கள் கல்வி கற்கின்ற பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்களும், ஆசிரியர்களும் பெற்ரோர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டார்கள். 
மேற்படி உதவி நிதியானது அமரர் திருமதி ரூபராணி சிவசுந்தரம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது கணவர் திரு சி. சிவசுந்தரம் அவர்களினால் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரு சி. சிவசுந்தரம் அவர்களும் அன்னாரின் மகன் திரு சி. ஜனந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்தமை சிறப்பாக அமைந்தது. 
பொருத்தமான மாணவர்களைத் தெரிவு செய்வதிலும், நிகழ்வினை ஒழுங்குபடுத்தி மாணவர்களுக்கு நிதியினை வழங்க சிறப்பான ஏற்பாடுகளைச் செய்வதிலும் கனடா வன்னிச் சங்கம் தனது சிறப்பான பணியினையாற்றி உதவிபுரிந்தது. இதற்காகத் தளத்திலே வன்னிச்சங்கப் பிரதேசப் பிரதிநிதி திரு பொ. மதன் அவர்கள் சிறப்பான செயற்பாடுகளைச் செய்திருந்தார்.

 

 

அம்பலவன்பொக்கணை அ.த.க.பாடசாலை, கைவேலி கணேசா வித்தியாலயம், முள்ளிவாய்க்கால் கனிஸ்ட வித்தியாலம், இரணைப்பாலை ஆர்.சி. பாடசாலை ஆகிய நான்கு பாடசாலைகளில் இருந்தும் தலா 5 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு இந்நிதியுதவி வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இந்த நிதியுதவியினை வழகிவைப்பதற்கு முன்வந்த திரு சி. சிவசுந்தரம் குடும்பத்தாருக்கு கனடா வன்னிச் சங்கத்தினர் தங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள். இவர்களைப்போன்று மாணவர்களுக்கோ அல்லது குடும்பங்களுக்கோ உதவி செய்ய விரும்புபவர்கள் கனடா வன்னிச் சங்கத்தோடு தொடர்பு கொள்வதற்கு 416-644-1113 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.

 

Category: