| |

எமது அமையத்தினால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் கணிணி நிலையங்களில் ஒன்றான தேசிய தொழிநுட்ப நிறுவனத்தின் தண்ணீரூற்றுக் கிளைக்கு கனடா பிறம்ரம் தமிழ்ச் சங்கத்தினால் ஒரு தொகுதி கணிணிகள் நன்கொடையளிக்கப்பட்டுள்ளது.

 

 

தொழிநுட்பக் கல்வியில் பின்தங்கியிருக்கும் வன்னி மாணவர்களுக்கு இலவசமான கணணிக் கற்கை நெறிகைகளை வழங்கி வரும் எமது தேசிய தொழிநுட்ப நிறுவனம் கணணிகள் பற்றாக்குறையுடன் இயங்கிவருகின்றது. இவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு பிறம்ரன் தமிழ்ச் சங்கத்தினால் வழங்கப்பட்ட இவ் நன்கொடை காலத்தின் தேவையறிந்து செய்யப்பட்ட அரிய செயலாகும்.

 

புலம்பெயர் தேசத்திலிருந்து தாய் மண் நோக்கிய பணியில் இவர்களைப் போன்று அனைவரும் தன்னார்வ தொண்டர்களாக இணைந்து செயற்ப்பட வேண்டியது இன்றை காலத்தின் தேவையாகும்.

 

பிறம்ரன் தமிழ்ச் சங்கத்துக்கு தண்ணீரூற்று கிளையின் மாணவர்கள் மற்றும் ஆசியர்கள் சார்பில் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்;.