Home

Written by Super User

திரு இ. சிவகுமார் அவர்களின் பரோபகார நன்கொடை உதவியினை விபுலானந்தபுரம், மயிலாம்பாவெளியில் வசித்து வருகின்ற திருமதி சசினி விசுவாசம் அவர்களுக்கு கறவையினப் பசு ஒன்றினை வாங்குவதற்கு வழங்கியுள்ளார். அவருக்கு உதவி பெற்றவருடன் இணைந்து அமையத்தினரும் தங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

 

இலண்டனில் இயங்கி வருகின்ற காட்லி கல்லூரியின் பழயமாணவர் சங்கம் வறுமைக் கோட்டின்கீழ் வாழ்க்கை நடாத்துகின்ற அல்லது போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து நன்றாகப் கல்வி கற்கக்கூடிய 15 மாணவர்களைத் தெரிவு செய்து தரும்படி கனடா வன்னிச் சங்கத்தினைக் கேட்டிருந்தது. அவர்களது கோரிக்கைக்கிணங்க 15 மாணவர்கள் தெரிவு செய்து வழங்கப்பட்டார்கள். அவர்களில் ஒரு மாணவனாகவே இந்தகுடும்ப மாணவன் உள்ளான். இக் குடும்பத்தின் வறுமை நிலையினையும் மாணவனின் கல்வித் திறமையினையும் கருத்தில் கொண்டு குறித்த மாணவரது பெயரும் 2014ம் ஆண்டு தை மாதம் காட்லி கல்லூரியின் பழையமாணவர் அமைப்பு இலண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று அம்மாணவன் நன்றாகக் கல்வி கற்கின்றார் என்பது தாயாரின் கடிதத்தின்மூலமாக அறியமுடிகின்றது.

திரு சிவகுமார் அவர்கள் தனது மகளின் பிறந்தநாளினை முன்னிட்டே இந்த உதவியினைக் குறித்த குடும்பத்திற்குச் செய்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

இவர் எமது அமையத்தின் நீண்டகால உறுப்பினரும், முன்னைநாள் தலைவர்களின் ஒருவரும் தற்போதைய நிர்வாக சபை உறுப்பினர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே இவரைப்போன்று பொது மக்களாகிய நீங்களும் உங்களது வீட்டில் நிகழும் பிறந்தநாள், திருமணநாள், 31ம் நாள் போன்ற இன்னோரன்ன கொண்டாட்டங்களின்போது தாயகத்திலே பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு எவ்வகையான சிறு உதவிகளையும் வழங்க முன்வரலாம், அல்லது சிறுவர் இல்லங்களில் வாழ்கின்ற குழந்தைகளுக்கான உணவு உதவி வழங்க முன்வரலாம். இவ்வாறாக உதவி செய்ய விரும்புபவர்கள் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ளுமாறு அன்பாகக் கேட்டுக் கொள்கின்றோம். 416-6441113

நீங்கள் வரும்போது என்ன கொண்டு வந்தீர்கள்
நீங்கள் போகும்போது உங்களோடு எதை எடுத்துச் செல்வீர்கள்
நீங்கள் வைத்திருபவைகள் எல்லாம் 
இந்தப் பூமியிலேயே எடுக்கபட்டவைகள்
அவை அனைத்தும் இந்தப் பூமிக்கே சொந்தம்
ஏன் உங்கள் உடலும் கூட இந்தப் பூமிக்கே சொந்தம்
ஒரு நாள் இந்தப் பூமி உங்களையும் சாப்பிடும்
இதனை நன்றாக உணர்ந்தாவது வாழும்போதே 
பாதிக்கபட்ட ஓர் சகமனிதனுக்கு உதவி செய்ய முன்வாருங்கள். "ஞானி"

 

Category: