| |

வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தின் அடுத்த ஓர் குடும்ப உதவித்திட்டமாக கறவையினப் பசு வழங்கிய செயற்பாடு முல்லைத்தீவு மாங்குளம் கிராமத்தில் இடம்பெற்றது. போரிலே கணவனை இழந்த குடும்பம் ஒன்றிற்கு திரு ராஜா சேந்தன் குடும்பத்தாரின் விருப்பத்தின் பிரகாரம் இந்த உதவித்திட்டம் அவர் அனு;பிவைத்த நிதி உதவியுடன் வன்னிச் சங்கத்தினால் நிறைவேற்றப்பட்டது.

 

திரு சேந்தன் குடும்பத்தாருக்கு அமையத்தினது மனமார்ந்த நன்றிகள். இந்த நிதி உதவியினைப் பெறுவதற்கு முன்னின்று உழைத்த அமையத்தின் உறுப்பினர் திரு கா. யோகநாதன் அவர்களுக்கும் தளத்தில் இந்த உதவித்திட்டத்தினை நிறைவேற்றுவதற்கு உதவிய திரு தே. அனோஜன் அவர்களுக்கும் வன்னிச் சங்கம் தனது நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
இது போன்ற உதவிகளை வழங்க விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம்: 416-644-1113