| |

நெடுங்கேணி ஒலுமடுவைச் சுற்றியுள்ள ஓடைவெளி,முதிரம்பிட்டி,கீரிசுட்டான், கற்குளம்,பட்டிக்குடியிருப்பு,மருதோடை, காஞ்சூரமோட்டை ,கோவில்புளியங்குளம், ஊஞ்சால்கட்டி,இராசபுரம் கோரமோட்டை, நொச்சிக்குளம், பட்டடைபிரிந்தகுளம்,போன்ற கிராமங்களில் அதிகமான குடும்பங்கள் போரினால் பாதிக்கப்பட்ட இறப்புக்களையும், உறுப்புக்களையும் பறிகொடுத்த குடும்பங்களாகவும், இன்றும் மிக அடிப்படையான வாழ்வாதார வசதிகளைக் கொண்ட குடும்பங்களாகவுமே வாழ்க்கையினை நடாத்திச் செல்கின்றன. 

 

 

 


இக்காரணங்களினால் சில குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு கல்விக்கான நிதியுதவியினை மீள்குடியேற்றத்தின் பின்னர் தொடர்ந்து செய்து வருகின்றது தற்போது அவர்களுக்கு எமது அமையம் குடும்ப வாழ்வாதார உதவிகளைச் செய்து கொடுப்பதில் கவனம் செலுத்துகின்றது 
அந்த வகையில் முதற்கட்டமாக இரண்டு குடும்பங்களுக்கு திரு செந்தூரன் (கனடா) அவர்களின் ஆத்மார்த்தமான நிதி உதவியோடு இரண்டு கறவையினப் பசுக்களை வாங்கி வழங்கி உதவிபுரிந்துள்ளது. இவ்வேலைகளைத் தளத்தில் செய்து முடிப்பதற்கு உதவியாக இருந்தவர் கனடா நவாலோ உரிமையாளரின் தந்தையார் திரு இ. நவரட்ணம் அவர்களுக்கும் திரு செந்தூரன் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். 


இதேபோன்ற உதவிகளைச் செய்வதற்கு விரும்புவோர் அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் 416-644-1113