| |

இல்லங்களிலே வாழ்கின்ற குழந்தைகளுக்கு உணவு உதவி வழங்க முன்வருவதில் புலம் பெயர் தமிழர்கள் பெருவிருப்பம் காட்டிவருகின்றார்கள். தாயகத்திலே பெற்றோரில்லாமல் இருக்கின்ற குழந்தைகளும் எங்கள் குழந்தைகளே என்ற எண்ணத்தோடு உணவுதவி வழங்க இன்னும் பலர் முன்வருகின்றார்கள்.

 

அமைய உறுப்பினர்களின் சிறப்பான செயற்பாட்டினால் இரண்டாவது உணவு உதவி பாரதி இல்லத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

உணவுதவித் திட்டத்தின் இரண்டாவதுகட்மாக திரு திருமதி சஜிதரன் சிலோஜனா அவர்களின் நிதியுதவியோடு பாரதி இல்லத்தில் இருக்கின்ற 115 குழந்தைகளுக்கும் மதிய உணவு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. அதன்போது எடுக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கின்றீர்கள். 
நீங்களும் இவ்வாறான உணவு உதவி வழங்க விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 416-644-1113

 

"வாய்ப்புக் கிட்டியபோது செய்யாதவர்கள் 
வாய்ப்பில்லாதபோது எப்படிச் செய்வார்கள்
இப்போது நல்ல வாய்ப்புக் கிட்டியுள்ளது
சரியாகப் பயன்படுத்திச் செய்ய முன்வாருங்கள்" "ஞானி"

 

.