| |

நெடுங்கேணி ஒலுமடு முதிரம்பிட்டிக்கிராமத்தில் வசிக்கின்றபோரிலே கால் ஒன்றினை இழந்துள்ள 5 குழந்தைகளுக்கு தாயாகவும், தனித்து வாழ்கின்ற இளந்தாயான திருமதி விக்கினேஸ்வரி அவர்களுக்கான தோட்டக் கிணறு அமைத்துக் கொடுக்கும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளது.

 

இக்கிணற்றினை அமைப்பதற்கான நிதியினைத் திரட்டித்தருவதில் அமையத்தின் உறுப்பினர் திரு கா. யோகநாதன் அவர்கள் கூடுதல் முயற்சி எடுத்துச் செயற்படுகின்றார். அவரது மதிப்பீட்டின் பிரகாரம் இன்னமும் 600 டொலர்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் மாரிகால விவசாயத்திற்காக நேரகாலத்துடனான தோட்டச் செய்கை ஆரம்பிப்பதற்கான நீர் வசதியைக் கொடுக்கும் பொருட்டு கிணற்று வேலைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தளத்தில் வேலைகளை திரு தே. அனோஜன் அவர்கள் கவனித்து வருகின்றார். படங்கள் தங்கள் பார்வைக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

 

(இணைப்பு)

நெடுங்கேணி ஒலுமடு முதிரம்பிட்டிக்கிராமத்தில் வசிக்கின்றபோரிலே கால் ஒன்றினை இழந்துள்ள 5 குழந்தைகளுக்கு தாயாகவும், தனித்து வாழ்கின்ற இளந்தாயான திருமதி விக்கினேஸ்வரி அவர்களுக்கான தோட்டக் கிணறு அமைத்துக் கொடுக்கும் வேலைகளில் கிணறு வெட்டப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இது போன்ற உதவிகளைச் செய்து கொடுக்க விரும்புவோர் அமையத்தை தொடர்பு கொள்ளவும்.


416 644 1113

 

எமது இணையத்தில் வெளியிடப்பட்ட கணறு வெட்டுதலுக்கான வேண்டுதல்